Readers, please enter your email ID and subscribe for regular updates and notifications.

Monday, May 20, 2013

பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தையின் அனுபவம்

பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தையின் அனுபவம்

மூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தை ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல்


ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க
பகவான் ஞான வள்ளல் திருவடிகளே சரணம் சரணம் சரணம்



சற்குருவின் திருவடியினை பணிந்து அவர் அருளாலே அவரை வணங்கி அவருடைய குழந்தையாகிய அடியவளுக்கு  பகவான் கருணா மூர்த்தி தரிசனம் தந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆரம்ப காலத்தில் எனக்கு பகவான் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் எனது தந்தை பகவானை வழிபடுவார். எங்கள் மதுரையில் பகவானால் நிறுவப்பட்ட சபை உள்ளது.எனது தந்தை அங்கு செல்வார். எனக்கு அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்தது. கொஞ்ச காலம் கழிந்து சபையின் முதல் ஆண்டு விழாவின் போது பகவானின் அருளால் எனது தந்தையுடன் சென்றேன். சுவாமியின் பக்தர் ஒருவர் சொற்பொழிவு ஆற்றினார் பிறகு அவர் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினால் உங்களுக்கு ஒரு பரிசு தருவேன் என்றார். உடனே எனக்கு நாமும் பரிசு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவர் "பகவான் ஆரம்ப காலத்தில் எந்த மலையில் வசித்தார் " என்ற கேள்வியை கேட்டார். நான் நினைத்தேன் நமக்கு இந்த சுவாமியை பற்றி தெரியாதே நாம் எப்படி பரிசு ங்குவோம் என்று. அவர் பல கேள்விகளுக்கு பிறகு கடைசியாக நான் பேசிய சொற்பொழிவில் இருந்து ஓரு கேள்வி கேட்கிறேன் என்று சொல்லி கேள்வியை கேட்டார். அதற்கான பதில் தெரிந்தவர்கள் கையை உயர்த்தினார்கள். அதில் இந்த அடியேனும் ஒருவர். அவர் என்னிடம் பதில் கேட்டார், நான் சரியான பதிலை கூறியவுடன் என்னை அழைத்து அந்த பரிசை தந்தார். பரிசு  பகவானை பற்றிய புத்தகம். இதன் மூலம் நான் நினைத்தேன் "நமக்கு என்ன கொடுக்கணும் எப்ப கொடுக்கணும்" என்பதை பகவான் அறிவார்.

அதன் பிறகு நான் சபைக்கு வார வாரம் செல்வேன் ஆனால் பகவானை பார்த்தது இல்லை. சில மாதங்கள்  சென்ற பிறகு பகவானின் அருளால் அவரை தரிசிக்க செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற பொழுது பகவான் எனக்கு சில வேலைகளை  கொடுத்தார்கள். அப்பொழுது சுவாமி சொன்னார்கள்  "கோபக்காரி ஆணவக்காரி" என்று . அப்பொழுது எல்லாம் நான் மிகவும் கோபப்படுவேன், அதை எனக்கு உணர்த்தினார். அன்று இரவு பகவானிடம்  ஊருக்கு போய் விட்டு வருகிறோம் என்று சொன்னோம் அதற்கு பகவான் போய் உட்காருங்கள் என்றார். சுவாமி எது சொன்னாலும் செய்தாலும் அது நம்முடைய நன்மைக்கே. சிறிது நேரம் சென்ற பிறகு நாங்கள் பகவானிடம்  ஊருக்கு போய் விட்டு வருகிறோம் என்று சொன்னோம்.பகவான் ஒரு திசை சொல்லி போகசொன்னார்கள். பகவானின் அருள் தரிசனத்துக்கு பிறகு பற்பல மாற்றங்கள் என்னுடைய வாழ்வில் நிகழ்ந்தும், நிகழ்ந்துகொண்டும் உள்ளன.

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்றும்  இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே. 
என்ற பாடலுக்கேற்ப கற்பக விருச்சமான பகவான் சற்குரு பக்தர்களுக்கு வேண்டியதை அருள காத்து கொண்டு இருக்கிறார்.

நாம்  பகவானிடம் முழுவதுமாக சரணடைந்து விட்டால் எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து தான் செய்வோம். நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் பகவானிடம் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணமே நம்மை நல்வழிப் படுத்தும். சுவாமி நமக்கு சொல்லும் பாடம் "வாழ்க வளமுடன் நேர்மையாக". நாம் நம் வாழ்வில் எல்லா செயல்களிலும் இந்த நேர்மையை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டால் பகவானின் அருள் நமக்கு பரிபுரனமாக கிடைக்கும்.

பகவானுக்கு நாம் மன கோவில் கட்டி சற்குருவின் திருநாமத்தை இடைவிடாது சொல்லி அந்த கருணா மூர்த்தியின் அருளை பெற்று வீடு பேறு அடைய முயல்வோம்.

அன்பு மாறா இல்லறமும் 
ஆசை இல்லா தர்மமும்
இன்னல் தார உறவுகளும் 
ஈகை உள்ள நெஞ்சமும்
உண்மை உணரும் லட்சியமும் 
ஊக்கம் அளிக்கும் நட்புமும் 
என்றும் மாற நற்குணமும் 
ஏவல் கேட்கும் பணிவும்
ஐயம் இல்லா வாழ்வும்
ஒழுக்கம் மாற இயக்கமும் 
ஓம் கார பெருமமும்
பிறப்பு அறுக்கும் ஒவ்வுச்சதமும்  
ஒன்று சேர தந்து அருள்வாய் 
சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம் 
                              
 - அன்பே கடவுள் சற்குரு வாழ்க
   சற்குரு வாழ்க சற்குருவே துணை
   சற்குரு பாதம்  சரணம் பாதம்.


Source: http://spiritualcbe.blogspot.in/

Regards,
Admin
http://www.siddhayogi.in/

No comments:

Post a Comment

Please share your comments and queries