Readers, please enter your email ID and subscribe for regular updates and notifications.

Saturday, March 2, 2013

சற்குரு சரணம்


ஓம் சந்தத மொளிரும்  ஞான  சற்குருவே சரணம்
ஓம் சச்சிதானந்த ஞான  சற்குருவே சரணம்
ஓம் சடாச்சர ஞான  சற்குருவே சரணம்
ஓம் அஷ்ட சித்திக்கு அதிபதியே சரணம்
ஓம் அன்பே சிவமான அய்யனே சரணம்
ஓம் அழகுதமிழ் பரிபாஷையல் அறிவு கொடுப்பாய் சரணம்
ஓம் அணாகதத்தில் ஒளிரும் அருட்ஜோதியே சரணம்
ஓம் அத்துவிதமாகி ஐக்கியமானவரே சரணம்
ஓம் அழைப்பவர் குரலுக்கு செவிகொடுப்பாய் சரணம்
ஓம் அறிவுச் சுடராலே அங்ஞானம் அழிப்பவரே சரணம்
ஓம் அயனைய்  மாலாய்   ஈசனும் ஆனவரே சரணம்
ஓம் அனந்த மூர்த்தியான ஆண்டவரே சரணம்
ஓம் அதிதமான அருளிறையே சரணம்
ஓம் அந்தமில்லா அதியிலலா சடாச்சரமே  சரணம்
ஓம் அக்கினியாக ஆன்மாவில் ஒளிர்பவரே சரணம்
ஓம் ஆதி பரஜோதியான அருட்கடலே சரணம்
ஓம் ஆகாயம் போல எங்கும் சகோதரமனவரே சரணம்
ஓம் ஆத்மஞான சூரியனே அருள்தருவாய்  சரணம்
ஓம் ஆராயிந்து அறியமுடியா அற்புதமே சரணம்
ஓம் ஆண்டிபோல அமர்திருக்கும் அருவமே சரணம்
ஓம்  ஆண்டியயும்  அரசனாக்கும்  அற்புதமே சரணம்
ஓம் ஆதாரங்களில் ஆட்சி  செய்யும் சற்குருவே சரணம்
ஓம் அழிக்குள் தவமிருந்த ஆண்டவா  சரணம்
ஓம் இகம் அழித்து பரம் காட்டும் ஈஸ்வரனே சரணம் 
ஓம் இடும்பன் மலை வாசம் செய்யும் ஏகாந்த சரணம்
ஓம்  இடும்பை தீர்த்து இன்பம் தரும் ஈஸ்வரனே சரணம்
ஓம் இச்சைகள் நீக்கிய சைத்தன்யாரே சரணம்
ஓம் இல்லறமும் நல்லறமாய் ஆக்கி தருவாய் சரணம்
ஓம் இயம நியம தர்மங்களை எடுத்து  உரைத்தாய் சரணம் 
ஓம் இதயத்தை வீடாக்கி இருப்பவரே சரணம்
ஓம் ஈடான திரியங்களை அடக்கி வைப்பாய் சரணம்
 ஓம் ஈகைக்கு அரசனான ஆண் டவரே சரணம்
ஓம் ஈஸ்வரனாகி இதயத்தில் ஆடும் சிவராஜனே சரணம்
ஓம் ஈறேழு உலகத்துக்கும் அரசனே சரணம்
ஓம் உண்மை பொருளான உயிர் ஜோதியே சரணம்
ஓம் உபாசன மூர்த்தியாக வந்தவரே சரணம்
ஓம் உருவெடுத்து  வந்திருக்கும் அருவ பொருளே  சரணம்
ஓம் உலகை எல்லாம்  உய்விக்க வந்தவரே சரணம்
ஓம் உன் அடியை பற்றி நின்றோம் பரந்தாமா சரணம்
 ஓம் உபதேசம்  வழங்கிடுவாய் சற்குருவே    சரணம்
ஓம் ஊழ் வீனை தீர்த்திடுவாய் உண்மை பொருளே சரணம்
ஓம் ஊக்கம் அழித்து நாட்டம் கொடுக்கும் நாதனே சரணம்
 ஓம் ஊழியம் செய்வோர்க்கு ஊழ் விதி அறுபவரே சரணம்
ஓம் எல்லா புகழுக்கும் சொந்தமான ஏகாம்பரரே சரணம்
ஓம் என்னையும் மேலாய் ஆட்கொண்ட பெருமானே  சரணம்
ஓம் எங்கும் ஜோதியாய் நிறைபவரே சரணம்
ஓம் எல்லையில்லா ஞானத்தை கொடுப்பவரே சரணம்
ஓம் எள்ளுக்குள் எண்ணெய் போல இருப்பவரே சரணம்
ஓம் எள்ளளவும் உன்னை விட்டு அகலமாட்டேன்  சரணம்
ஓம் எல்லா ஜீவருக்கும் முக்தி அளிப்பவரே சரணம் 
ஓம் ஏழ்பிறப்பை உணர்த்தும் ஏகம்பரரே சரணம்
ஓம் ஐயம் தீர்த்து வைக்கும் ஐயா சரணம்
ஓம் ஐம்புலனை அடக்கி வைக்கும் ஆற்றலே சரணம்
ஓம்  ஐம்பூதத்திற்கும் அதிபரான ஆதியே சரணம்
ஓம் ஒன்றுமுதலெட்டான ஞான வள்ளலே சரணம்
ஓம் ஒன்றுமில்லா மாயாவை உணர்த்திடுவாய் சரணம்
ஓம் ஒன்றாகி இதயத்தில் நிற்பவரே சரணம்
ஓம் என்னும் சத்திய பொருளான சற்குருவே சரணம்
ஓம் ஓங்கார பிரணவமாய் ஒளிருபவரே சரணம்
ஓம் ஓசை ஊரு ஒலியுனை மாற்றி வைத்தாய் சரணம்
ஓம் ^ஒளஷதம் ஆகி பிறவிப்பிணி தீர்த்தாய் சரணம்
ஓம்  கணக்கன்பட்டி வாசம் செய்யும் கருணாகரனே சரணம்
ஓம் கனல் கண்ணால் திரிபுரம் எரித்திடுவாய் சரணம்
ஓம் காலக் கணக்கு உன்படியே மாற்றி வைப்பாய் சரணம்
ஓம் கணக்கன்பட்டியை குருசேத்திரம் அக்கி வைத்தாய் சரணம்
ஓம் கலியுகத்தை முடிக்க வந்த தர்மராஜரே சரணம்
ஓம் காலனையே கடுச்சொல்லால் விரட்டுவாய் சரணம் 
ஓம் கண்பட்டால் கழிவு நீரும் அமுதமாகும் அருட்பொருளே சரணம்
ஓம் கழிவு அழிவு ஏதுமில்லை என்றுணர்த்தும் ஐயனே சரணம்
ஓம் கருணை கடலாய் வந்துதித்த ஞாயிரே சரணம்
ஓம்  சச்சிதானந்தமான சற்குருவே சரணம்
ஓம் சங்கடக்கள் தீர்த்து வைக்கும் சடசரமே சரணம்
ஓம் சாம்பலையும் ஒளஷதமாய் ஆக்கி தருவாய் சரணம்
ஓம் சாம்பசிவ மூர்த்தியான சரகுருவே சரணம்
ஓம் சஞ்சிதம் அகற்றி வைக்கும் நித்தியரே சரணம்
ஓம் சஞ்சிவியாக நின்று மரணமில்லா வாழ்வு தந்தாய் சரணம்
ஓம் சிவசக்தி ரூபமாகி சித்தி தருவாய் சரணம்
ஓம் சித்தருக்கும் சித்தி தரும் வள்ளலே சரணம்
ஓம் சித்தமெல்லாம் நிறைந்திடும் சிவப்பிரபாகரமே சரணம்
ஓம் சிந்தை எல்லாம் நிறைந்திருக்கும் சீராளா சரணம்
ஓம் சூட்சம்மாய் நிற்கின்ற வேத பொருளே  சரணம்
ஓம்  சூரியனுக்கும் மேலான சுயம் பிரகசானே சரணம் 
ஓம் தவம் செய்ய எங்களுக்கும் வரம் தருவாய் சரணம்
ஓம் தத்துவம் எல்லாம் ஒன்றாகி காட்சி சரணம்
ஓம் கூடஸ்தபிரமம் ஆகி  சீர் தருவாய் சரணம்
ஓம் கூடு பாயும் வித்தையுலே விற்பனரே சரணம்
ஓம் கூடி வந்தோர் தொல்லை எல்லாம் திர்த்து வைப்பாய் சரணம்
ஓம் தேடி வந்தோர் இல்லம் எல்லாம் நிறைந்து இருப்பாய் சரணம்
ஓம் தேக ஜீவ சுகமளிக்கும் தேசிகா சரணம்
ஓம் நாடி வந்தோர் துயர் துடைக்கும்  நாதனே சரணம்
ஓம் நம்பினோர்க்கு ஞான தீபம் ஏற்றி வைப்பாய்  சரணம் 
ஓம் கும்பிட்டோரின் குறை தீர்க்கும் குணலனே சரணம்
ஓம் பக்தி ஓடு வருவோர்கல்லாம் முக்தி கொடுப்பாய் சரணம்
ஓம் பார்த்தவுடன் தேகத்திற்கு சுகம் கொடுத்தாய் சரணம்
ஓம் வாசி எனும் பாம்பாட்டி வாழ்வு தரும் சித்தரே  சரணம்
ஓம் விபூதி பிரியனே வினை தீர்ப்பாய் சரணம்
ஓம்  மனித உருவில் வந்து நிற்கும் மகேஸ்வரா சரணம்
ஓம் பாவிகளின் பாவங்களை சுமபபவரே சரணம்
ஓம் பாதார விந்தைகளை பணிந்து நின்றோம் சரணம்
ஓம் மரணமில்லா பெருவாழ்வு வளங்கிடுவாய் சரணம்
ஓம் மனம் என்ற குரங்கை கட்டி வைத்தாய் சரணம்
ஓம் குழந்தை போல வேலை செய்து கீதை சொல்வாய் சரணம்
ஓம் ஜாதி குலம் ஏதுமில்லை என்று உரைத்தாய் சரணம்
ஓம் மீதனத்தின் மீதமருந்தா பராபரமே சரணம்
ஓம் பதினேழு தேகம்  பெற்ற பழனி சுவாமியே சரணம்
ஓம் ஞான சபை நிறுவி நிதம் காப்பவரே சரணம்
ஓம் சபையில் உள்ளோர் குறைகள் எல்லாம் தீர்ப்பவரே சரணம்
ஓம் சரணம் சரணம் சந்ததம் ஒளிரும் ஞான சற்குருவே சரணம் சரணம் சரணம்

No comments:

Post a Comment

Please share your comments and queries